வெள்ளி, 24 ஜூன், 2011


                                   கண்ணீர் அஞ்சலி  
                                  ____________________
                            செல்வன் பிரதாபன் சூர்யா 
             
             

                               மலர்வு  01 .11 . 1993             உதிர்வு  20. 06 .2011 

              எங்கள்   கழகத்தின்    எழுகதிராய்  உதித்தவனே - என்றும் 
              உங்கள்  உதை கண்டு  எதிரிகளும் புகழ்ந்ததுண்டு - உன் 
             தங்கக்   காலெடுத்து   தரையினிலே    தடை   உடைத்து 
             சிங்கமென   நீ  பாய்ந்து  சிறப்புடனே  விளையாடித்தான் 

             வித்தைகள்  காட்டி  விட்டு  விதம்  விதமாய்  நீ  படைத்த 
             எத்தனை  சாதனைகள்  எத்தனை  விருதுமயம் - எல்லாம் 
             சொத்தென  நீ  சேர்த்தாய்  சொந்தங்கள்  மனம்  ஈர்த்தாய் 
             அத்தனையும் விட்டதென்ன அரைவாழ்வை தொட்டதென்ன 

             சிந்தனையை  பறக்க   விட்டு   சீருடனே     கல்விகற்று 
             உந்தன் உயர் புகழையே உரக்கவே சொல்லி நின்றோம் 
             வந்தான்   எமன்   என்று   வாழ்கின்ற   வயதை   விட்டு 
             எம்தனையே   ஏங்கவிட்டு   எங்கு   சென்றாய்  எம்வீரா 

             ஈழத்தின்  மானத்தீரனே    இளநட்சத்திர  கழகத்து   வீரனே 
             ஞாலத்தின்  நீ  வாழ்ந்த  வாழ்க்கை  நம்மிடையே பாதியடா
             காலத்தின்  தேவையிதா  இல்லை கட்டாய ஒய்விதுவா -உன்னை 
             பாலத்தில் பிரிந்தோமா   நட்புப் பாலத்தில் பிரியவில்லை எம்மை 

             புகப்போன பெரும்படிப்பும் புகழ்போன விளையாட்டும் 
             உவப்பான உன்கதைகள் உதட்டளவு புன்னகைகள் 
            தவிப்போடு  நாம்  துடிக்க   தமிழ்  இள  நட்சத்திரமே 
           சுவர்க்கபுரிதனை  விட்டு சொர்க்கபுரி போனதென்ன 

           சூர்யா  சூர்யா  என்று  சொந்தங்கள்   கலங்குகின்றோம்  
           பாரையா பாரையா என பெற்றோர்கள் புலம்புகின்றோம்  
           கூறையா  உன்  குறையை  குடிமுழுக  ஏன்  நினைத்தாய் 
          யாரையா இவ்வழியில் யமன் வந்தா அழைத்து சென்றான் 

           நோயெடுத்து போயிருந்தால் நொந்திடோமே -காலன் 
           சாவெடுத்துப்   போனானே சாகின்ற வயதா நண்பா 
           பாவெடுத்துப் போற்றி நிற்போம் பாலகனே போய் வாடா 
           பூவேடுத்துப் பூசிப்போம் புண்ணியனே சாந்தி சாந்தி 

            _______________________________________________________


            சுவிஸ் இள நட்சத்திர விளையாட்டு கழக வீரன்  சூர்யாவுக்கு 

             எமது  கண்ணீர் அஞ்சலிகள் .அவரின்  ஆத்மா சாந்தியடைய                                                                                   இறைவனை வேண்டி    நிற்கிறோம் .அன்னாரின்                                      
                  குடும்பத்தாருக்கும் உறவுகளுக்கும் எமது ஆழ்ந்த  அனுதாபங்களைத் தெரிவித்துக்  கொள்கிறோம்             

லீஸ் இள நட்சத்திர விளையாட்டுக் கழகம்-சுவிட்சர்லாந்த் 
                                      www .lyssyoungstar  .com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக