வியாழன், 30 ஜூன், 2011


திங்கள், 27 ஜூன், 2011


NEU: Gruppenauslosung - Maveerar Cup 2011

Gruppenauslosung
20. Maveerar Cup
Sonntag, 3. Juli 2011
Bern-Allmend
Gruppe A
Gruppe B
SC Royal Bern
SC Blue Star Lausanne
SC Young Birds Luzern
SC Swiss Boys Bern I
Tamil Youth St. Gallen
Illam Siruthaikal Zurich
Sunrise St. Gallen
Bern Kickers
Gruppe C
Gruppe D
SC Young Star Lyss
SC Thaiman Zug
Kick Boys Baden
SC Rainbow Luzern
SC Young Royal Zurich
SC Win Boys Basel
Neuchâtel Tamoul
SC Swiss Boys Bern II
இந்த  வருடத்தில் எமது கழகத்தின் மற்றுமொரு சாதனை 
நேற்று நடைபெற்ற லவுசான் சுற்றுப்போட்டியில் லிஸ் இள நட்சத்திர விளையாட்டுக் கழகம் பேர்ன் சுவிஸ் பாய்ஸ் அணியை 2-1 என்றரீதியில் வென்று கிண்ணத்தை தமதாக்கி கொண்டது 
எதிர்வரும் மூன்றாம் திகதி பெர்னில் நடைபெறவுள்ள மாவீரர் கிண்ண உதய் பந்தாட்டப் போட்டிகளில் இடம்பெறவுள்ள கழகங்களின் குழுநிலை தெரிவுகள் 
------------------------------------------------------------------------------------------------------------
குழு ஏ -
               றோயல்  பேர்ன்
               யங் பேர்ட்ஸ் லுசேர்ன் 
               தமிழ் யூத்  செங்காலன் 
               சன்ரைஸ் செங்காலன் 

குழு பீ 
             புளூ ஸ்டார் லவுசான் 
             சுவிஸ் பாய்ஸ் பேர்ன் 1
             இளம் சிறுத்தைகள் சூரிச் 
            பேர்ன் கிகேர்ஸ் 
குழு சீ 
             லீஸ் யங் ஸ்டார் 
             கிக் பாய்ஸ் பாடன்
             யங் றோயல் சூரிச் 
             நோய்ச்சற்றல் தமிழ்ஸ்

குழு டீ
             தாய்மண் சுக் 
             வானவில் லுசேர்ன் 
             வின்போய்ஸ் பாசல் 
             சுவிச்போய்ஸ் பேர்ன் 2

ஞாயிறு, 26 ஜூன், 2011


செல்வன் சூர்யா சிவானந்தன்
மலர்வு : 1 நவம்பர் 1993 — உதிர்வு : 20 யூன் 2011
சுவிட்சர்லாந்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சூர்யா சிவானந்தன் அவர்கள் 20-06-2011 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், பிரதாபன் யோகராணி தம்பதிகளின் அன்பு மகனும்,
சத்யா அவர்களின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
வீட்டுமுகவரி:Pirathaban Yogarany Sivananthan-Kanagarajah
Fellenbergstrasse 20,
3052 Zollikofen,
Switzerland
தகவல்
எங்கள் அன்புச் செல்வத்தின் இனிமையான அன்பான நற்பண்புகளை இழந்து ஆறாத்துயரில் மூழ்கித் தவிக்கும்: கனகராஜா குடும்பத்தினர், சிவானந்தன் குடும்பத்தினர்
நிகழ்வுகள்
தகனம்/நல்லடக்கம்
திகதி:திங்கட்கிழமை 27/06/2011, 10:00 மு.ப
முகவரி:Murtenstrasse 51, Bern, switzerland 
தொடர்புகளுக்கு
பிரதாபன் யோகராணி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41319110357
புண்ணியமூர்த்தி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41326810581
சங்கர் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41763846697
மோகன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41628228862

வெள்ளி, 24 ஜூன், 2011


                                   கண்ணீர் அஞ்சலி  
                                  ____________________
                            செல்வன் பிரதாபன் சூர்யா 
             
             

                               மலர்வு  01 .11 . 1993             உதிர்வு  20. 06 .2011 

              எங்கள்   கழகத்தின்    எழுகதிராய்  உதித்தவனே - என்றும் 
              உங்கள்  உதை கண்டு  எதிரிகளும் புகழ்ந்ததுண்டு - உன் 
             தங்கக்   காலெடுத்து   தரையினிலே    தடை   உடைத்து 
             சிங்கமென   நீ  பாய்ந்து  சிறப்புடனே  விளையாடித்தான் 

             வித்தைகள்  காட்டி  விட்டு  விதம்  விதமாய்  நீ  படைத்த 
             எத்தனை  சாதனைகள்  எத்தனை  விருதுமயம் - எல்லாம் 
             சொத்தென  நீ  சேர்த்தாய்  சொந்தங்கள்  மனம்  ஈர்த்தாய் 
             அத்தனையும் விட்டதென்ன அரைவாழ்வை தொட்டதென்ன 

             சிந்தனையை  பறக்க   விட்டு   சீருடனே     கல்விகற்று 
             உந்தன் உயர் புகழையே உரக்கவே சொல்லி நின்றோம் 
             வந்தான்   எமன்   என்று   வாழ்கின்ற   வயதை   விட்டு 
             எம்தனையே   ஏங்கவிட்டு   எங்கு   சென்றாய்  எம்வீரா 

             ஈழத்தின்  மானத்தீரனே    இளநட்சத்திர  கழகத்து   வீரனே 
             ஞாலத்தின்  நீ  வாழ்ந்த  வாழ்க்கை  நம்மிடையே பாதியடா
             காலத்தின்  தேவையிதா  இல்லை கட்டாய ஒய்விதுவா -உன்னை 
             பாலத்தில் பிரிந்தோமா   நட்புப் பாலத்தில் பிரியவில்லை எம்மை 

             புகப்போன பெரும்படிப்பும் புகழ்போன விளையாட்டும் 
             உவப்பான உன்கதைகள் உதட்டளவு புன்னகைகள் 
            தவிப்போடு  நாம்  துடிக்க   தமிழ்  இள  நட்சத்திரமே 
           சுவர்க்கபுரிதனை  விட்டு சொர்க்கபுரி போனதென்ன 

           சூர்யா  சூர்யா  என்று  சொந்தங்கள்   கலங்குகின்றோம்  
           பாரையா பாரையா என பெற்றோர்கள் புலம்புகின்றோம்  
           கூறையா  உன்  குறையை  குடிமுழுக  ஏன்  நினைத்தாய் 
          யாரையா இவ்வழியில் யமன் வந்தா அழைத்து சென்றான் 

           நோயெடுத்து போயிருந்தால் நொந்திடோமே -காலன் 
           சாவெடுத்துப்   போனானே சாகின்ற வயதா நண்பா 
           பாவெடுத்துப் போற்றி நிற்போம் பாலகனே போய் வாடா 
           பூவேடுத்துப் பூசிப்போம் புண்ணியனே சாந்தி சாந்தி 

            _______________________________________________________


            சுவிஸ் இள நட்சத்திர விளையாட்டு கழக வீரன்  சூர்யாவுக்கு 

             எமது  கண்ணீர் அஞ்சலிகள் .அவரின்  ஆத்மா சாந்தியடைய                                                                                   இறைவனை வேண்டி    நிற்கிறோம் .அன்னாரின்                                      
                  குடும்பத்தாருக்கும் உறவுகளுக்கும் எமது ஆழ்ந்த  அனுதாபங்களைத் தெரிவித்துக்  கொள்கிறோம்             

லீஸ் இள நட்சத்திர விளையாட்டுக் கழகம்-சுவிட்சர்லாந்த் 
                                      www .lyssyoungstar  .com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக