திங்கள், 17 டிசம்பர், 2012

லீஸ் இளம் நட்சத்திர   வி.க.இன் கூட்ட அறிக்கை (16.12.2012- LYSS )
சுவிட்சர்லாந்து லீஸ்இள  நட்சத்திர விளையாட்டுக் கழகத்தின் ஆலோசனைக் கூட்டம் நேற்றமாலை ஆறு மணிக்கு லீஸ் நகரில் சிறப்பாக நடைபெற்றது -
ஏராளமான கழகத்தவ்ர்களும் அபிமானிகளும் கலந்து கொண்டிருந்தார்கள்.மிக முக்கியமான  ஆலோசனகைளும் தீர்மானங்களும் முன்வைக்கபட்டன.அனைத்து தீர்மானங்களும் ஏகமனதாக  நிறைவேற்றப் பட்டன.அவை பற்றிய விபரங்களை  கீழ தருகின்றோம்.தவிர்க்க முடியாத காரணகளால் வர முடியாதவர்கள் பார்க்க வசதியாக  இருக்கும்.அத்தோடு சமூகமளிக்காதவர்களும் இந்த தீர்மானங்களுக்கு அதரவு கொடுப்பார்களென  நம்புகிறோம்  முக்கியமாக ஆலோசிக்கப்பட்ட விடயங்கள்  எதிர்வரும் ஜனவரியில் நடாத்த உள்ள உள்ளரங்க உதைபந்தாட்ட சுற்றுபோட்டி ,மார்ச்சில் நடத்த உள்ள    FUSSBALL GALA விழா பற்றியவையே.

உள்ளரங்க உதைபந்தாட்ட சுற்று போட்டி
------------------------------------------------------------
இந்த சுற்று போட்டியை சிறப்பாக நடத்துவதெனவும் அதற்கான பணிகளை பொருத்தமானவர்களிடம் வகுத்து கொடுப்பதெனவும் முடிவாகி அவ்வாறே செய்யபட்டது. நிதிபிரி,வு உணவுசாலை ப,ணி மைதான  ஒழுங்,கு துப்பரவு செய்தல்  என்ற வகைகளில் அவற்றுக்கு பொருத்தமானவர்கள்  அத்தோடு பொருளாதார ஒத்துழைப்பு வழங்குமுகமாக தாமாகவே முன்வந்து நேரடி நிதி,பொருளுதவி என அளித்தமை சிறப்பான செயல்.வர்த்தக ரீதியில் ஈடுபடுவோரும் ஆதரவு கொடுக்க முன்வந்தனர். சமூகம் அளிக்கதவர்களும் அடுத்து வரும் நாட்களில் நிர்வகதினருடன் நீங்களாகவே தொடர்புகொண்டு பங்களிப்பு செய்யலாம் அத்தோடு சுற்றுப்போட்டி அன்று உங்கள் முழு ஒத்துழைப்பையும் நல்கி சிறப்பக்குமாறு கேட்டுக் கொல்லபட்டனர்.

சிறப்பு விழா 2013 FUSSBALLGALA 2013
---------------------------------------------------
இந்தவிழா செய்வது பற்றி எல்லோரிடமும் ஆலோசனை கேட்கபட்டபோது ஏகமனதாக  செயலாம் என் தீர்மானம் காணப்பட்டது
மார்ச் மதத்தில் செயவது எனவும் கழக ஒற்றுமை ,விருந்தோம்பல்,வீரர்களுக்கான கௌரவிப்பு  வீரர்கள்,வீராங்கனைகள் ,பெற்றோர்கள் கழகத்தவர்,அபிமானிகள் ஆதரவு தரும் வர்த்தகர்கள் சக கழகத்தவர்கள் இடையே நட்பார்ந்த உறவை மேம்படுத்தல் என்பனவற்றை பறைசாற்றும் முகமாக இந்த விழா அமைய வேண்டும் என ஒருமனதாக தீர்மானம் நிறைவானது இந்த விழா உயர்தர விருந்தோம்பலுடன் கூடிய மகிழ்வூட்டும் நிகழ்ச்சியாக அமையவும் தரமான உயர் எண்ணங்களை வெளிப்படுத்தும் வகையில் அமையும் என உறுதியானது இந்த விழாவை  முன்னெடுக்க ஒரு ஆலோசனைக்குழு ஒன்றும் நியமிக்கப்பட்டடது  இந்த குழுவில் பெரியோர் இளைஞர்கள் அங்கம் வகிக்கின்றனர் குழு பற்றிய விபரம் பின்னர் அறிய தரப்படும் .

இவை தவிர வேறு ஆலோசனைகளும் செய்யப்பட்டன  கடந்த காலத்தில் ( 2012) கழகத்தின் பெரியோர் அணி பங்குபற்றிய 13 சுற்றுப் போட்டிகளில் பங்கு பற்றி அனைத்திலும் இறுதியா ட்டத்தில் நுழைந்த மாபெரும் சாதனை அத்தோடு  அவற்றில் தமிழீழகிண்ணம் ஐரோப்பா உட்பட ஒன்பது சுற்றுகிண்ணங்களை  வென்றமை , இந்த வருடத்தின் புள்ளி அடிப்படையி ல் சம்மேளனத்தின் தரவரிசையில் முதலாம் இடத்தை அடைந்தமை மகளிர் அணியின் சிறப்பான  வெற்றிகள்,இளைஞர் 15 வயதின் சிறப்பான வெற்றிகள் (பங்கு பற்றிய  4 சுற்றில் சுவிஸ் பாய் கிண்ணம் கிட்டுகிண்ண ம் முதலாம் இடம் மாவீரர் கிண்ண ம் மூன்றாம் இடம் ஐரோப்பிய தமிழீழ கிண்ணம் இரண்டாம் இடம்) என்பனவும் அடங்கும் இந்த வீரர்கள் வீராங்களைகளுக்கு பாராட்டு டேஹ்ரிவிக்கப்படது

சுமார் 9.30 மணியளவில் கூட்டம் இனிதே நிறைவேறியது கூட்டத்தில்ஏராளமான  பெரியோர்கள் கழகத்தவர் அபிமானிகள் வீர்கள் வீராங்கனைகள் பங்குபற்றினர்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக