ஞாயிறு, 6 ஜனவரி, 2013

கிட்டு கிண்ணம் 2013  செய்தி 
_____________________________________________

 கடந்த (05/06.01.2013) சனி ,ஞாயிறு தினங்களில் நடைபெற்ற கிட்டு  கிண்ண சுற்றுப் போட்டிகளில் பங்கு பற்றிய எமது பெரியோர் அணியும் 17 வயது இளைஞர் அணியும் முதலாம் இடங்களை வென்று கிண்ணங்களை கைப்பற்றி வந்துள்ளன பாராட்டுக்கள் 


பெரியோருக்கான சுற்று போட்டி 

நேற்றைய தினம் (05.01.2013) சுவிட்சர்லாந்த் சுக் மாநில ரொட் க்ரோஸ் டொர்ப்மட் உள்ளரங்க மைதானத்தில் நடைபெற்ற கிட்டு கிண்ண சுற்றுப் போட்டியில் ஜெர்மனி ,சுவிட்சர்லாந்து நாடுகளின்  32 கழகங்கள் பங்குபற்றி சிறப்பித்திருந்தன. A முதல் H வரையிலான எட்டு குழுக்களில் தலா நான்கு கழகங்களாக அணி  வகுத்து   போட்டிகளில் பங்கு பற்றின 

இளம் நட்சத்திர அணிகள் இரண்டு  குழு டி ,குழு எப் இல் இடம்பிடித்திருந்தன , 
குழு நிலை போட்டிகளில் இள நட்சத்திர முதல் அணி முறையே தமிழ் ஸ்டார் இவேர்டேன்(4-2), சன்ரைஸ் பீ (3-0), யங் பேர்ட்ஸ் மஞ்சள் (2-1) ஆகிய மூன்று அணிகல்யுமே வெற்றி கொண்டு ஒன்பது புள்ளிகளுடன் முதல் இடத்தை (9 ; 9-3)பிடித்தது . தொடர்ந்த வெற்றி பாதையில் அரை காலிறுதி ஆட்டத்தில் றோயல் 2(3-2) அணியையும் , காலிறுதி ஆட்டத்தில் சன்ரைஸ் அணியையும் வென்று அரை  இறுதியினுள் நுழைந்தது . துரதிருஷ்ட வசமாக குழு எப் இல் இருந்து வெற்றி பாதையூடாக அரை இறுதி வரை  பிரவேசித்த எமது ஏ அணியை எதிர் கொள்ள நேர்ந்தது .மிக சுவாரஷ்யமாக நடைபெற்ற இந்த போட்டியில் 3-2 என்ற ரீதியில் வென்று இறுதி  ஆட்டத்தில் காத்திருந்த சுவிசின் மற்றுமொரு பலமிக்க கழகமான றோயல் அணியோடு மோதி ரசிகர்களுக்கு விறுவிறுப்பை ஏற்படுத்திய ஒரு ஆட்டத்தை நடத்தியது .இரு அணிகளுமே சளைக்காமல் தமது திறமையை வெளிப்படுத்தி விளையாடிய போதும் எமது அணி 2-0 என்ற ரீதியில் வெற்றி பெற்று  கழகத்துக்கு இன்னும் ஒரு வரலாற்று பதிவை எழுதி வந்துள்ளது . சிறந்த விளையாட்டு வீரராக எமது அணியின் நிறோச் தெரிவானார் .சிறந்த பந்து காப்பாளராக ராயல் அணி பந்து காப்பாளர் தெரிவானார் 
றோயல் அணி மீது எமது மதிப்பளித்தலை செலுத்துவதோடு சிறப்பான முறையில் நடத்திய அமைபபாளர்களுக்கு கழகத்தின் சார்பில் பாரட்டுக்களை தெரிவித்துக்  கொள்கிறோம் 

எமது இளம் நட்சத்திர ஏ குழு எப் இல் முறையே யங் பேர்ட்ஸ்(0-0),சிட்டி பாய்ஸ் (3-0), தமிழ் யுத் ஏ (2-0) என்ற ரீதியில் ஆடி முடித்து இரண்டு வெற்றி ஒரு சமநிலை எடுத்து குழுவில் 7 புள்ளிகளுடன் முதலாம் இடத்தை எடுத்தது 
அடுத்து அரை கால் இறுதி ஆட்டத்தில்  றோயல்அணியை (0-0;p 7.6) என்ற ரீதியில் வென்று கால்  இறுதி ஆட்டத்தில் ஸ்டுட்கார்ட் அணியை(2-0) என்ற ரீதியில் வென்று அரை இறுதிஆட்டத்தில்  எமது மற்றைய அணியிடம் தோற்று போனது (2-3) 


இளையோர் சுற்றுப் போட்டி 

இன்று (06.01.2013) நடை பெற்ற இந்த சுற்று போட்டியில் எமது 17 வயது அணி வீரர்கள் சிறப்பான முறையில் விளையாடி மீண்டும் கிட்டு கிண்ணத்தை கைப்பற்றினர் (2012  கிட்டு கிண்ண வெற்றியாளர்கள் ).இந்த இளைஞர் அணி குழு நிலை ஆட்டத்தில் சுவிசின்  மற்றுமொரு பலம் மிக்க அணியான இளம் சிறுத்தைகள் அணியை 2-1(1-0; சதுரிகன்,, 2-0;திலீபன் ) என்ற ரீதியில் வென்றனர் .ஆனாலும் இரண்டாவதாக ஈழவர்  அணிஇடம் (0-2)என்ற ரீதியில் தோற்று போனது .குழுவில் இரண்டாம் நிலையை அடைந்து குழு எயில் முதல் இடத்தை அடைந்த பலமிக்க அணியான தாய்மண்ணை 2-1 (1-0 ;சா துரிகன் ; 2-0 சாதுரிகன் )என்ற ரீதியில் வென்று இறுதியாட்டத்துக்கு தகுதி பெற்றது .    இறுதியாட்டதில் மீண்டும் அரையிறுதியில் தாய்மண் பீ(6-4) ஐ வென்று வந்த இளம் சிறுத்தைகளை சந்தித்தது . பரபரப்பாக  நடைபெற்ற இறுதியாட்டத்தில் எமது அணி ஆரம்பாகி 50 செக்கனிலேயே சாதுரிகன் அடித்த  கோலினால்  வெற்றி நிலை எடுத்தது .இரண்டாம் கோலையும் சாதுரிகன் அடிக்க  2-0 என்ற வெற்றி ஓரளவு உறுதியானது.தொடர்நது திறமையாக விளையாடிய எமது அணிக்காக மூன்றாம் கோலினையும்  திலீபன் அடிக்க இளம் சிறுத்தைகள் ஒரு கோலினை போட்டு விறுவிறு ப்பாக்கினர் .தொடர்ந்து மற்றுமொரு கோலை இளம்சிறுத்தைகள் அடிக்க போட்டி உச்ச சுவாரஸ்ய நிலையை எட்டியது .எமது அணிக்காக நான்காவது கோலை விளாசினார் அகிம்சன் .இந்த நிலையில் எமது வீரரின் கையில் பந்து பட்டதனால் எதிரணிக்கு கிடைத்த பனால்டி உதையை  எமது பந்து காப்பாளர் ஜோன் அற்புதமாக தடுத்து விட்டது பாராட்டுக்குரியது . மீதமாக 5 நிமிடங்கள் இருந்த போது  எமது அணியின் தாக்குதல் வீரர் திலீபன் சாதுரியமாக பின்னணி பாதுகாப்பு வீரர்களான தனுசன் ஸ்டாலினோடு இணைய பின்னோக்கி இங்கி பாதுகாப்பு ஆட்டம் ஆடி எமது அணிக்கு வெற்றியை பெற்றுகொடுக்க உதவினார்  
எமது அணி வீரர் அதிதன்நேற்றைய போட்டிகளில்  காயம் அடைந்த நிலையில் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்ற போதிலும் முன்னணி தாக்குதல் முனைப்பு மழுங்கி இருந்த போதும் போராடி பெற்ற இந்த வெற்றியை அதிதனுக்கு உரித்துடையதாக்குகிறோம் .
இதே அணி சென்ற தடவையும் இதே கிட்டு கிண்ணத்தை இதே இம்சிறுத்தைகள் அணியை சந்தித்து 5-0 என்ற ரீதியில் வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது 

எமது அணி பாதுகாப்பு வீரர் தனுசன் சிறந்த வீரராக தெரிவானார் .எமது அணிக்ககா அதிக கோல்களை அடித்த வீரர் சாதுரிகன், அற்புதமாக பந்துகாப்பளராக ஆடிய ஜான்,எதிரணிகளின் தாக்குதல்களை எல்லா வேளையிலும் முறியடித்த  பாதுகாப்பு வீரர்களா தனுசன் ஸ்டாலின் மதுசன் மற்றும் வெற்றிக்கான முக்கிய கோலை அடித்த  முன்னணி வீரர் அகிம்சன்; கோலினை அடிப்பதற்காக
அதிக  பந்துகளை கொடுத்துதவி இரண்டு கோல் களையும் அடித்த திலீபன்  .ஆகியோர் பாராட்டுக்குரியவர்களே .முக்கிய குறிப்பு .பங்கு பற்றிய எல்லா அணிகளுமே 1 அல்லது 2 தமிழர் அல்லாத வேற்று இனதுவீரர்களை  சேர்த்து விளையாடி இருந்தமை கவனிக்க பட வேண்டியது.எமது அணிமட்டுமே தனியே தமிழ் வீரர்களை மட்டுமே கொண்டிருந்தது 

குழு பீ 

இளம் நட்சத்திரம்  -இளம் சிறுத்தைகள்  2-1

இளம் நட்சத்திரம் -ஈழவர் 0-2


அரை இறுதி 


இளம் நட்சத்திரம் -தாய்மண் ஏ    2-1

தாய்மண்  பீ-இளம் சிறுத்தைகள்  4-6

இறுதி

 இளம் நட்சத்திரம்-இளம் சிறுத்தைகள் 4-3_________________________________________________________________________________
STFA Meeting vom 02.12.2012 in Bern

Anwesende Teams:
Young Birds FC
SC Young Star, Lyss
SC Young Royal, Zürich
SC Thaiman, Zug
SC Royal, Bern
SC Swissboys, Bern
Winboys, Basel
FC Blue Star, Lausanne
FC Vanavil, Luzern

Damen:
Blue Flame, Chur
SC Young Star, Lyss

Anwesende STFA:
Sivakumar
Vaikunthan
Sutha
Murali

Es wurden diverse Regeln angepasst die GÜLTIGKEIT HABEN AB 01.01.2013:

KÜNDIGUNGEN:
___________________
- Der Kündigungstermin für Spieler ist jetzt neu per ENDE SAISON und nicht per Ende Jahr!

- Kündigungen können beim STFA eingereicht werden vom 01.08. - 31.08.

- Die STFA hat beschlossen öffentlich ein Musterschreiben bereitzustellen, da die Kündigungsvorschriften per 2012 nicht korrekt oder nur spärlich eingehalten wurden. Das Muster muss dann nur noch mit den Namen, Vereinsangaben und Unterschrift ausgefüllt werden.

- Die Kündigungen müssen an STFA geschickt werden im Original. Eine Kopie MUSS an den VEREINSHAUPTVERANTWORTLICHEN des ex Vereins gesendet werden.

- Die neue Saison beginnt immer ab 01. SEPTEMBER des Jahres (nach Tamilar Vilaiyadu Vila).

NEUE SAISON:
___________________
- Punkte in der Tabelle werden bis und mit TVV verteilt.

- In der ersten Septemberwoche wird die STFA Generalversammlung abgehalten! Danach beginnt die neue Saison.

- Im März 2013 werden Spielerpässe eingeführt! Jeder Spieler erhält eine eindeutige ID mit Nummer, die bei Transfers in den neuen Verein mitgenommen werden!

- Turnierveranstalter dürfen NEU die Gruppen nach dem Zufallsprinzip auslosen ohne Berücksichtigung der Topfverteilung! Wenn ein Team mehrere Gruppen stellt werden diese nach den bisherigen Regeln verteilt um ein frühzeitiges Zusammentreffen zu verhindern!

- 9 vs. 9 Feldturniere
* neu darf der Veranstalter für 9 vs. 9 Turniere 200.- Startgebühr für die erste Mannschaft verlangen.
* 9 vs. 9 wird zukünftig nur mit Abseits gespielt gemäss IFV D-Junioren Reglement.
* Auswechslungen pro Spiel sind höchstens 3 erlaubt.
* Es darf kein fliegender Wechsel durchgeführt werden.
* In einem Spiel ausgewechselte Spieler dürfen nicht wieder im gleichen Spiel eingewechselt werden.

SONSTIGES:
___________________

*** Manoharan Myluppillai erfüllt nur noch eine unterstützende Funktion beim STFA! Er ist einzig und allein für die Spielerlistenkontrolle verantwortlich. Sämtliche, bisher ausgeübte Tätigkeiten und ausgeführte Aufgaben im Namen des Verbands wurden an Sivakumar und sein Team übergeben. Bei Fragen wird gebeten NICHT MEHR MANO ANNA zu kontaktieren!

*** Ab 01.01.2013 wird ein neues Team in den Verband aufgenommen: FC UNITED FIRE. Bisher sind 16 Spieler für dieses Team registriert worden.

*** Nachwuchsspielerregelung (1997er für Saison 2012/13):
Spieler die das 16. Lebensjahr im 2013 erreichen, dürfen ab 01.01.2013 für ein Senioren Team spielen. Die Anmeldung dieser Spieler muss über den jeweiligen Vereinsvorstand beim STFA erfolgen. Hat der Spieler vor für einen anderen Verein zu spielen, als bei seinem Ausbildungsverein, so muss er die STFA und NUR DEN EX-VEREIN schriftlich per Post über den Wechsel informieren. Eine Kündigung ist nicht notwendig/zwingend, da die Nachwuchsspieler nicht den Regelungen der Senioren unterstehen. Es wird empfohlen, dass die Benachrichtigungen per Post EINGESCHRIEBEN versendet werden, da sonst der Ausbildungsverein Rekurse einlegen kann (Grund: Nichterhalt).

Bei FRAGEN steht das STFA-TEAM gerne zur Verfügung!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக