வெள்ளி, 18 ஜனவரி, 2013

AUS-SRI 18.01.2013

74 ஓட்டங்களில் சுருண்டது அவுஸ்திரேலியா: 4 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி
அவுஸ்திரேலியா அணிக்கெதிரான 3வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அவுஸ்திரேலியா- இலங்கை அணிகள் மோதும் 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்றது.
முதலில் விளையாடிய அவுஸ்திரேலிய அணி இலங்கை வீரர்களின் அபாரமான பந்துவீச்சால் திணறியது. அந்த அணி 26.4 ஓவரில் 74 ஓட்டங்களில் சுருண்டது.
ஸ்டார்க் அதிக பட்சமாக 22 ஓட்டங்கள் எடுத்தார். 9 அவுஸ்திரேலிய வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
அவுஸ்திரேலியாவின் 2வது குறைந்தபட்ச ஸ்கோராகும். இதற்கு முன்பு அந்த அணி 2 முறை 70 ஓட்டங்களில் சுருண்டு இருந்தது.
இலங்கை தரப்பில் குலசேகரா 5 விக்கெட்டும், மலிங்கா 3 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
பின்னர் 75 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் இலங்கை அணி களம் இறங்கி விளையாடியது.
தொடக்கத்தில் தடுமாறிய இலங்கை அணி டில்ஷன் மற்றும் பெரேரா ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் வெற்றி இலக்கை எட்டியது.
இலங்கை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 75 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிக பட்சமாக டில்ஷன் 22 ஓட்டங்களும், பெரேரா 22 ஓட்டங்களும் எடுத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக