ஞாயிறு, 10 பிப்ரவரி, 2013

ஜேர்மனி சிண்டேல்பிங்கேன் உள்ளரங்க சுற்று போட்டி .செய்தி
__________________________________________________________________

கடந்த 09.02.2013 அன்று நடைபெற்ற சுற்றுப் போட்டியி 19 கழகங்கள் பங்கு பற்றின.அவற்றில் சுவிசில் இருந்து கலந்து கொண்ட 5 கழகங்களான யங் ஸ்டார் ,யங் ஸ்டார் 1,இளம் சிறுத்தைகள் ,யுனைடெட் பயர் ,சுவிஸ் பாய்ஸ்,இளம் ராயல் ஆகிய  5 கழகங்களுமே காலிறுதி ஆட்டத்துக்குள் நுழைந்தன.அரையிறுதி ஆட்டத்தில் யங் ஸ்டார் அணி என்னபெற்றல் அணியுடன் மோதியது. ஆரம்பத்திலேயே என்னபெற்றால் ஒரு கோலினை போட்டு ஆட்டத்தை விறுவிறுப்பாக்கியது .இருந்தாலும் அடுத்த 5 நிமிடங்களிலேயே  4 கோல்களை யங் ஸ்டார் அணி போட்டு ஆட்டத்தின் வெற்றியை தன் வசப் படுத்தியது .இறுதியாட்டத்தில் ஸ்டுக்கார்ட் அணியை சந்தித்த யங் ஸ்டார் 4-2 என்ற ரீதியில்  வென்று  கிண்ணத்தைக் கைப்பற்றியது . சிறந்த விளையாட்டு வீரன்,அதிக கோல் அடித்த வீரன் ஆகிய 2 விருதுகளையும் யங் ஸ்டார் யசியும்,சிறந்த முன்னணி தாக்குதல் வீரன் விருதையங் ஸ்டார்   நிசாத்தும் பெற்றனர்.ச்டூட்கார்ட் வீரர் ஜெனோடன் சிறந்த பந்துக்காப்பாளராக என்னபெற்றால் வீரர் அனித்   சிறந்த பாதுகாப்பு வீரராக   தெரிவாகினர்
மூன்றாம் இடத்தை என்னபெற்றால் அணி  கைப்பற்றியது
யங் ஸ்டார் இரண்டாவது தடவையாக இந்த சுற்றுப் போட்டி கிண்ணத்தை  கைப்பற்றுகிறது .யங்  ஸ்டார் அணியில் தரமின்,சபேசன்,ஜசிந்தன்,பிரதீஸ் ,ஜெசி,கௌதம்,நிஷத் ஆகியோர் இடம் பிடித்திருந்தனர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக