திங்கள், 15 ஏப்ரல், 2013


தொடரும் சுவிஸ் லீஸ் இளம் நட்சத்திர விளையாட்டுக் கழகத்தின் சாதனைகள் 
நேற்று 14.04.2013 அன்று சுவிஸ் சிட்டி பாய்ஸ் கழகம் நடத்திய உள்ளரங்க உதய் பந்தாட்ட சுற்றுப் போட்டியில் லீஸ் யங் ஸ்டார்  விளையாட்டுக் கழகம் முதலாம் இடத்தை டைந்து இந்த சுற்றுக் கிண்ணத்தை கைப்பற்றி உள்ளது இந்த வருடத்தில் நடைபெற்ற சுற்று போட்டிகளில் அதிகமான கிண்ணங்களை கைப்பற்றி சாதனை படைத்தது வரும் இந்த கழகம் நேற்றைய சுற்றுப் போட்டிகளில் பல அற்புதங்களை நிகல்த்தியுள்ளது  சிறந்த விளையாட்டு வீரரனாக நிருபன் கனகராசாவும் சிறந்த ஆட்ட நாயகனாக யசிதன் விஜயகுமாரும் தெரிவானார்கள் .
இந்த சுற்று போட்டியில் பங்கு பற்றிய இக்கழகம் பற்றிய தகவல்கள் சில

*விளையாடிய அனைத்து போட்டிகளிலுமே வெற்றி பெற்றமை

*எல்லாப் போட்டிகளிலுமே இரண்டு கோல்களுக்கு மேலே அடித்து வென்றமை

*எந்த போட்டிகளிலுமே பனால்டி உதை மூலமான  வெற்றி நிர்ணயிப்புக்கு செல்லாமல் வென்றமை

* எல்லாப் போட்டிகளிலும் அதிகமான கோல்களை அடித்துக் குவித்தமை

*அடிக்கப்பட்ட  கோல்களின்  சராசரி  22 : 6 = 3.66  ஆறு போட்டிகளில் 22 கோல்கள்

* கோல் வித்தியாசம்  +16

*இறுதி ஆட்டத்தில்பலம் மிக்க   தர வரிசையில் முதல் இடத்தில உள்ள கழகமான யங் பேர்ட்சை 4-1 என்ற ரீதியில் வென்றமை (முந்தைய சுற்றுப் போட்டி ஒன்றிலும் இதே கழகத்தை 6-0 என்ற ரீதியில் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது )

* இறுதியாட்டம் ஆரம்பித்த 50 ஆவது செக்கனிலேயே முதலாவது கோலையும் 1 நிமிடம் 44 செக்கனிலேயே இரண்டாவது கோலையும் 3நிமிடம் 49 செக்கனிலேயே மூன்றாவது கோலையும் அடித்து அசத்தியிருந்தமை

* சுவிசின் பலம் மிக்க பிரபலமான கழகங்களான யங் பேர்ட்ஸ் (இறுதியாட்டம்   4-1),றோயல் (அரையிறுதி ஆட்டம்  3-1 ), சுவிஸ் போய்ஸ் (காலிறுதி ஆட்டம் 2-0),யங் றோயல் குழு நிலை ஆட்டம்  5-1) என வரிசையாக வென்று வந்தமை

கழகம் இந்த வருடத்தில்  நிகழ்த்திய சாதனைகள்

" அதிகமான சுற்று கிண்ணங்கள் வென்றமை (4)
*அதிகமான சுற்று போட்டிகளில் இருதியாடதுக்கு வந்தமை (8)
* அதிகமான புள்ளிகளை பெற்றமை
*அதிகமான முதல் மூன்று இடங்களுக்குள் வந்தமை (8)
* அதிகமான அரையிறுதிக்குள் நுழைந்தமை (8)
*பங்கு பற்றிய சுற்றுக்களில் குறைந்த அளவு  அரையிறுதிக்குள் நுழையாமை(1)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக