ஞாயிறு, 5 மே, 2013

தொடரும் லீஸ் யங் ஸ்டாரின் மாபெரும் சாதனைப் பதிவுகள் 

இன்று 05.05.2013  ஞாயிறன்று நடைபெற்ற தாய் மண் விளையாட்டுக் கழக உதை பந்தாட்டச் சுற்றுப் போட்டியில் மீண்டும் யங் ஸ்டார் கிண்ணத்தை வென்றுள்ளது .

                      குழு ஏ இல் முதலாவது விளையாட்டில் ராயல் கழகத்துடனான  ஆட்டதுக்கு வீரர்கலிஉல்ன் வருகை தாமதமான போதும் 7 வீரர்களுன் களம் இறங்கிய அணி 0-2 என்று தோற்றுப்  போன போதும் அடுத்து வந்த நான்கு குழு நிலைப் போட்டிகளிலும் வெற்றி பெற்று அரை இறுதி ஆட்டத்தில் லவுசான் ப்ளூ ஸ்டாரை 3-0என்ற ரீதயில் வென்றிருந்தது .இறுதியாட்டத்தில் பலம் மிக மற்றொரு கழகமான யங் பெர்ட்சை 3.0 என்ற ரீதியில் வென்று அசத்தி இருந்தது . முக்கியமாக முதலாவது ரோயலுடனான 7 வீரர்களின் ஆட்டத்தை தவிர அனைத்திலுமே  வெற்றியோடு எந்த அணியிடமும் எதிர் கோல்களை  வாங்காமல்  சாதனை புரிந்தார்கள் வீரர்கள் . முக்கியமாக எமது அணியின் பந்து காப்பாளர் தர்மின் வசந்தகுமார் 7 வீர்கள் கொண்ட முதலாவது ராயல் போட்டி தவிர்ந்த அனைத்திலுமே  எந்த கோலையும் உள்விடாது தடுத்து அற்புதமாக  ஆடி இருந்தமை குறிப்பிடத் தக்கது 

சிறந்தவீரர்   யசிந்தன் விஜயகுமார் 
 ஆட்ட சிறப்பு வீரர்  பகிஷ் சின்னதம்பி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக