வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

இளம் நட்சத்திர விளையாட்டுக்  கழகம் புதிய தர வரிசையில் முதலாம் இடம் 


கடந்த ஞாயிறன்று நடைபெற்ற சுவிஸ் பாய்ஸ் சுற்று போட்டியில் எமது கழகத்தின் இரு அணிகளும் சிறப்பாக ஆடி 1 ஆம் 3 ஆம் இடங்களை கைப்பற்றி இருந்தன.கடந்த வருடமும் எமது கழகத்தின் முத்கல் அணியும் 15 வயது அணியும் முதலாம் இடங்களை பெற்று இருந்தன. இந்த முறை எமது கழகத்தின் முதல் அணி மற்று எ பிரிவு அணி  ,1997 அணி என்பவற்றின் வீரர்கள்  இணைந்து வியூகம் அமைத்து இருந்தனர் .போட்டிகள் அனைத்திலும் எமது முதல் அணியின் அனுபவம் வாய்ந்த வீரர்களான பாதுகாப்பு நிலை வீரர்கள் சபேசன், பிரதீஸ், சஞ்சீவன், ஜசிதன்  ஆகியோர் அமைத்திருந்த  பலமான  வியூகத்தை உடைத்து    நுழைய முடியாமல் எதிரணி வீரர்கள் தவித்தனர் .
அனுபவம் வாய்ந்த அணித்தலைவர் யசிதன் எதிரணிகளுக்கு தக்க மாதிரி  சிறப்பாக தனது வீரர்களை வியூக படுத்தி இருந்தார் .எதிரணியிடம் இருந்து ஒரு தவறுக்கான பனால்டி கொளினையும் அதிச்டவசமான  இறுதியாட்ட கொலோன்ரையும் மட்டுமே வங்கி இருந்தனர் .பந்து காப்பாளர்  ஆபத்தான பல எதிரணி உதைகளை அற்புதமாக தடுத்தாடினார் .விசேசமாக றோயல் அணியுடனான காலிறுதி ஆட்டத்தில் பனான்ல்டி உதை  வெற்றி நிர்ணயப்பில் உன்னதமாக பங்காற்றி இருந்தார் இவருக்கு சிறந்த பந்துக்காப்பாளர் விருதும் கிடைத்து உள்ளது .பாதுகாப்பு வீர்கள் சுவர் அமைத்து கொடுக்க மத்திய நிலை ஆட்டக் காரர்களான இளம் வீரர்கள் அதிதன் ,திலக்சன் திலீபன் ,மதுசன்,அகிம்சன்.திவ்யன்  ஆகியோர் லாவகமாக பந்தினை எடுத்து சென்று எதிரணி பக்கத்துக்கு அவர்களின் வியூகத்தை உடைத்து உள் நுழைந்தனர் .இந்த அகோரமான ஆட்ட வேகம் இறுதியாட்டம் வரை கழகத்தை எடுத்து சென்றது எமது நட்சத்திர வீரர் நிரூபன் பல வழிகலிஉம்  சிறப்பாக ஆடி அவரது களமாடும் நுட்பம் ,இணைந்து ஆடும் உணர்வு, பந்து கடத்தும் வேகம் என்பன அணிக்கு கை கொடுக்க எந்த ஆட்டத்திலும் தோல்வியே அடையாது கிண்ணத்தை கைப்பற்ற காரணமாக அமைந்தது எனலாம் . எமது மற்றுமொரு அனுபவம் மிக்க நட்சத்திர வீரர் நிசுவும் இறுதி  2ஆட்டங்களில் இணைந்து அணிக்கு மேலும் உற்சாகத்தை கொடுத்தார் இறுதி ஆட்டத்தில் முக்கியமான  2கோல்களை கூட அடித்து உதவினார் .
எமது கழகத்துக்கே உரிய சிறந்த அம்சமான சேர்ந்து விளையாடும் பண்பு அங்கெ காணக் கூடியதாக இருந்தது .முக்கியமாக சீனியர் வீரர்களும் ஜூனியர் வீரர்களுமன்பால் இணைந்து திறமை காட் டியது பாராட்டுக்குரியது

திலீபன், திலக்சன், நிஷு ஆகியோர் தலா  இரண்டு கோல்களையும் பிரதீஸ், நிரூபன் ஆகியோர் தலா  ஒவ்வொரு கோலினையும் போட்டிருந்தனர்
நிரூபன் சிறந்த ஆட்ட நாயகனாக தெரிவானார் .முதலாம் இடத்துக்கான கிண்ணமும் சுற்றுக் கிண்ணமும் (இரண்டாவது வருடமாக ) கழகத்துக்கு கிடைத்தன 26 புள்ளிகளை எடுத்து இந்த சுற்றின் மூலம் ஆரம்பமாகி இருக்கு புதிய தர வரிசையில் முதலாம் இடத்தை கழகம் அடைந்துள்ளது
சிறந்த அணித்தலைவருக்கும் வீரர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் நன்றிகள் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக