ஞாயிறு, 9 மார்ச், 2014

யங் ஸ்டார் கழகம் இன்றைய  சூரிச் சிட்டிபோய்ஸ் சுற்றுக் கிண்ணத்தை வென்று  சாதனை (முழுவிபரம் பின்னர் )

இன்று நடைபெற்ற இந்த உள்ளரங்க சுற்றுப் போட்டியிலும்  சுவிஸ்  தமிழர் உதைபந்தாட்ட சம்மேளன தர வரிசையில் முதலாம் இடத்தில் இருக்கும் யங்  ஸ்டார் கழகம்  வெற்றி பெற்றுள்ள மகிழ்ச்சியான  செய்தியை தெரிவித்துக்  கொள்கிறோம் .இன்றை போட்டிகளில் எந்த ஒரு அணியாலும் வெல்ல முடியாத அதி உன்னத  திறைமையை இந்த கழகம் காண்பித்துள்ளது குறிப்பிடத் தக்கது . எந்த அணியிடமும் தோற்காது அணைத்து போட்டிகளிலுமே 2 க்கு மேற்பட்ட கோல்களை  அடித்து சாதனை படைத்துள்ளது .
ஒரு புள்ளிவிபரக் கோவை-உயர்ந்த பத்து தரவுகள்
1.முதலாம்  இடம் வெற்றிக்கிண்ணம்
2.சிறந்த வீரர் விருது கிண்ணம் நிசாத சதானந்தன் செல்லத்துரை
3.சிறந்த பந்துக்காப்பாளர்விருதுக்கிண்ணம்  சதீஸ்வரன் வரதராசன் 
4..அனைத்துப் போட்டிகளிலும்  வெற்றி
5. எல்லாப் போட்டிகளுமே 2 அல்லது  3 கோல்களை அடித்து வென்றமை
6.எதிரணிகளுக்கு மொத்தமாக 19 கோல்களை அடித்தமை
7.எதிராணிகளிடம் இருந்து மிகக் குறைவான 5 கோல்களை மட்டுமே வாங்கியமை
8.எல்லாப் போட்டிகளுமே +2 கோல்கள் வித்தியாசம்
9.பங்கு பற்றிய  7 போட்டிகளில் 5 இல் 3-1 என்ற ரீதியிலான வெற்றிகள் , 2 இல்     2-0 என்ற ரீதியிலான வெற்றிகள்
10. பலம் மிக்க கழகங்களான சுவிஸ் பாய்ஸ் ,ஜெர்மனியின் கழகமான UTSC ஸ்டுக்காட்,இளம் சிறுத்தைகள்  மற்றும் வளர்ந்து வரும் பிளக்புல்ஸ் ஆகியவற்றை 3-1 என்ற ரீதியில் வீழ்த்தியமை மற்றைய ஜெர்மனியின் கழகமான TFC ஸ்டுக்காட்  ,வானவில் அணிகளை 2-0 என்ற ரீதியில் வென்றமை
மேலதிக விபரங்கள பின்னர் அறியத்தருகின்றோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக