சனி, 5 ஜூலை, 2014

மாவீரர் கிண்ணத்தை  வென்றது  யங் ஸ்டார் விளையாட்டுக் கழகம் .U 17 அணிக்கு  2 ஆம் இடம் 
தொடர்ந்து 3  சுற்றுப் போட்டிகளில் நடைபெற்ற எந்த போட்டியிலுமே  தோற்காத ஒரே அணியாக மற்றுமொரு சாதனை 
இன்று 05.07.2014  சனியன்று காலை  8.30 க்கு ஆரம்பமாகிய 23 வது மாவீரர் கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில்  அனைத்து போட்டிகளிலுமே
வெற்றி பெற்று வந்த  யங் ஸ்டார்  கழகம் இறு தியாட்டதில்   மற்றுமொரு பலம் மிக்க கழகமான றோயலை  1-0 என்ற ரீதியில் வென்று  கிண்ணத்தை கைப்பற்றி தனது சாதனை வரிசையை நீடித்தது இன்றைய போட்டியில் குழு  A இல் முதல் போட்டியிலேயே பலம் மிக்க  கழகமான சுவிஸ் போய்சை எதிர்த்தாடி 5-1 என்ற பாரிய வெற்றியை பெற்று அடித்தளமிட்டது .தொடர்ந்து வந்த போட்டிகளில் றோயல் 2 ஐ 2-0 எனற ரீதியிலும் யங்றோயலை 1-0 என்றரீதியிலும் வெற்றி பெற்று   குழுவில் 9 புள்ளிகளுடன் முதலாம் இடத்தை தக்க வைத்தது .தொடர்ந்து காலிறுதி ஆட்டத்தில் 4-0 என்றரீதியில்  ஈகிளை வென்று  நுழைந்த அரை இறுதி ஆட்டத்தில் புளூ ஸ்டாரை 1-0 என்ற ரீதியில் வென்றது .இறுதி ஆட்டத்தில் 1-0 என்ற ரீதியில் றோயலை வென்று அசத்தி உள்ளது .எமது நட்சத்திர வீரர் நிஷாத் சதானந்தனுக்கு சிறந்த வீரருக்கான விருது கிடைத்தது யன்க்ச்டார் கழகம் இறுதியாக நடைபெற்ற சிட்டிபோய்ஸ் ,புளூ ஸ்டார் ,மாவீரர் கிண்ணம் என மூன்று சுற்றுகளிலுமே எந்த அணியிடமும் எந்த போட்டியிலும் தோல்வி காணமல் ஆடி வருவது ஒரு பாரிய சாதனையாகும் யங்ஸ்டார் இன்றை போட்டியில் ஒரேயொரு கோலை மட்டுமே எதிரணி களிடம் இருந்து வாங்கி இருந்தது சிறப்பானது . இன்றைய இறுதி கட்ட போட்டிகளில் ஒரே நேரத்தில் பக்கம் பக்கமாக அமைந்துள்ள இரண்டு மைதானங்களில் பெரியோருக்கான  இறுதியாட்டத்தில் யன்க்டாரும் 17 வயது பிரிவு இறுதியாட்டத்தில் யன்க்ச்டரும் ஆடிக் கொண்டிருந்தமை ரசிகர்களிடையே  வியப்பையும் பரபரப்பையும் உண்டு பண்ணியது .17 வயது பிரிவு பிரிவி அணியும் அணைத்து குழு போட்டிகளும் வெற்றி பெற்றது  குழு ஆட்டங்களில் தமிழர் ஒன்றியத்தை 2-1 என்ற ரீதியிலும் ஈழவரை 2-0 எனற  ரீதியிலும் ,தாய்மண்ணை 3-1 எனற ரீதியிலும் வென்று 9 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்தது ,தொடர்ந்து அரை இறுதி ஆட்டத்தில் வானவில்லை எதிர்த்தாடி 2.0 என்ற ரீதியிலும் வென்று இறுதி ஆட்டத்தில் நுழைந்தது.இறுதி ஆட்டத்தில் இளம்சிறுத்தைகளை திறமையாக எதிர்த்தாடிய எமது அணி பல கோல்களை போடும் சந்தர்ப்பத்தை தவற விட்டது .இறுதி கட்டத்தில்  அதிஸ்டவசமாக இலம்சிருதைகள் ஒரு கோளை போடா ஆட்டம் நிறைவுக்கு வந்தது .இறுதி வரை திறமையாக ஆடிய 17 வயது அணி துரதிருஷ் ட வசமாக மயிரிழையில் வெற்றியை பறி கொடுத்த து .எமது இந்த அணியில் இணைந்தாடிய லிட்டில் ஸ்டார் அணி வீரர்கள் வேணு,சுசி ஆகியோருக்கு எமது நன்றி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக