திங்கள், 25 ஜனவரி, 2016

கேர்ணல் கிட்டு உள்ளரங்கக் கிண்ணத்தை Lyss Young Star அணியினர் தம் வசமாக்கினர். 
09.01.16 Bern Neufeldஉள்ளரங்க மைதானத்தில் கேர்ணல் கிட்டு உள்ளரங்க உதைபந்தாட்ட ச சுற்றுப் போட்டி நடைபெற்றது. 31 கழகங்கள் இப்போட்டியில் பங்குபற்றியது. இரண்டாவது சுற்றிற்குLyss Youngstar அணியினது 4 பிரிவுகளும் தகுதி பெற்றமை Swissதமிழர் உதைபந்தாட்ட வரலாற்றில் ஒரு சிறப்புச் சாதனையாகும். மேலும் 3 அணிகள் கால் இறுதியாட்டத்திற்கு தகுதி பெற்றமை மேலும் ஒரு சிறப்புச் சாதனையாகும். Young Star அணியினர் தாம் பங்கு பற்றிய அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்று கிண்ணத்தை தமதாக்கினர். மொத்தம் 25 கோல்கள் அடித்து 1 கோலையே வாங்கி சாதனை படைத்தனர். அணியின் முன்னணி வீரர்Nisath ன் அதிரடி ஆட்டமே இவர்களின் வெற்றிக்கு காரணமாகும் அத்துடன் அணியின் வீரர்களின் சிறப்பாட்டம் இவரி களின் வெற்றிக்கு முக்கிய காரணமாகும். மற்றும் 15/16 உள்ளரங்க போட்டித் தொடரில் தொடர்ந்து 5 சுற்றுப் போட்டிகளில் இறுதியாட்டத்தில் பங்குபற்றி அவற்றில் நான்கில் வெற்றி பெற்றமை ஒரு சிறப்புச் சாதனையாகும். மேலும் இக் காலப்பகுதியில் இவர்களீ UTSC Stuttgar அணியினரின் உள்ளரங்க கிண்ணத்தையும் பெற்றமை மேலும் ஒரு சாதனையாகும்.நன்றி மனோகரன் 

ஜெர்மனியில்நடந்தUTSC Stuttgartஉள்ளரங்க சுற்றுபோட்டியில் யங் ஸ்டாரின் இரண்டு அணிகளும் இறுதியாட்டத்துக்கு வந்து தமக்குள் மோதி முதலாம் இரண்டாம் இடத்தை அடைந்தன என்பது விசேசமானது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக